SCHOOL SONG பள்ளிப் பாடல் பள்ளிப் பாடல் ஆதியும் அந்தமும் ஏதுமில்லாதஅன்பிலும் அருளிலும் நிகரிலா இறைவா,அகிலம் முழுதும் படைத்தவன் நீயேஅனைத்து புகழும் உரியவன் நீயே உன்னையே வணங்கி உன்னருள் தேடும் நின்னருள் பெற்றோர் நிறைவுடை வழியில் நித்தமும் சென்றிடநீயருள் புரிவாய் நித்தமும் சென்றிட நீயருள் புரிவாய் அறப்பணி ஆற்றும் அல்லாப் பிச்சை அருமைப் புதல்வர் அவர்தம் சந்ததி நற்பணி தொடர்ந்திட நல்லருள் புரிவாய் நற்பணிதொடர்ந்திடநல்லருள் புரிவாய பரிவுடன் கல்வி பண்புடன் ஒழுக்கம் பெருக வளர்க்கும் பிரிலியண்ட் பள்ளி பெருகி வளர்ந்திட பேரருள் புரிவாய்பெருகி வளர்ந்திட பேரருள் புரிவாய் அறிவொளி வழங்கிடும் அன்புடை முதல்வர் இணைந்து பனி செய்யும் இனிய நாள் துணைவோர் இனிது வாழ்ந்திட இன்னருள் புரிவாய் இனிது வாழ்ந்திட இன்னருள் புரிவாய் மாசிலா குணமிகு மாணவ மணிகள் மாண்புறும் பெற்றோர் மகிழ்ந்திடும் நல்லோர் மறைவழி சென்றே மலர்ந்திட செய்வாய் மறைவழி சென்றே மலர்ந்திட செய்வாய் ஆதியும் அந்தமும் ஏதுமில்லாதஅன்பிலும் அருளிலும் நிகரிலா இறைவா,அகிலம் முழுதும் படைத்தவன் நீயேஅனைத்து புகழும் உரியவன் நீயே இயற்றியவர் : கவிஞர் சோழநாடு, க. மு. நெயினார் முகம்மது